பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.71 கோடி!
ADDED :4608 days ago
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில், 24 நாட்களில், ஒரு கோடியே 71 லட்சத்து 24 ஆயிரத்து 625 ரூபாய் கிடைத்துள்ளது. பழநி கார்த்திகை மண்டபத்தில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், ரொக்கமாக ஒரு கோடியே 71 லட்சத்து 24 ஆயிரத்து 625 ரூபாயும், தங்கம் 776 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 850 கிராம், வெளிநாட்டு கரன்சி 1451 கிடைத்துள்ளது. இதுதவிர, தங்கம், வெள்ளியிலான, வேல், மோதிரம், தாலி, ஆள்ரூபம், செயின், பாதம், கைவிலங்கு, கொலுசுகள், காசுகள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணைஆணையர் (பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உடனிருந்தார்.