உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னம்பல சுவாமிகள் மடாலயத்தில் கும்பாபிஷேகம்

பொன்னம்பல சுவாமிகள் மடாலயத்தில் கும்பாபிஷேகம்

திருப்போரூர்: செம்பாக்கம் பொன்னம்பல சுவாமிகள் மடாலயத்தில், கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், பொன் னம்பல சுவாமிகள் மடம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மடத்தில் சுவாமிகள் சன்னிதி மற்றும் விநாயகர், முருகர் ஆகிய சன்னிதிகள் சீரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, கடந்த 15ம் தேதி துவங்கி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !