கீதை உபதேச சொற்பொழிவு
ADDED :4284 days ago
ஆனைமலை : ஆனைமலை அருகே கோட்டூர் கதிராயப்பெருமாள் கோவிலில் 48 நாட்களுக்கு பகவத்கீதை சொற்பொழிவு நடக்கிறது. ஆனைமலை அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் -பழனியூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீ கதிராயப்பெருமாள் கோவிலின் கும்பாபிேஷகம் கடந்த 12ம் தேதி நடந்தது. இதன் தொடர்ச்சியாக கோவிலில் மண்டலாபிேஷகம் விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு திருக்கோவில் வளாகத்தில் மகாபாரத குருேஷத்திரப் போரின் போது கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேச சொற்பொழிவு நடைபெற உள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ராமு கல்லுாரி தாளாளர் நித்தியானந்தம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.