அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :4286 days ago
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் கள்ளுக்கடை மூலை அருகில் பழமையான தீப்பாஞ்சாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 11ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. மறுநாள் காலை ரக்ஷாபந்தனம், யாத்ராதானம், கிரக பிரீதியும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தன. இதே போல் அரசூர் திரவுபதையம்மன் கோவிலில் கடந்த 10ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜைகள் துவங்கி, 12ம் தேதி காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.