மாதா அமிர்தானந்தமயி தேவி வருகை!
நாகர்கோவில்: திருவனந்தபுரம் கைமனம் அமிர்த நகரில் பிரம்மஸ்தான கோவில் மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடம் ஆகியவை உள்ளன. அங்குள்ள பிரம்மஸ்தான கோவில் திருவிழா வருகிற 24,25 தேதிகளில் நடைபெறஉள்ளது. இந்த விழாவில் மாதா அமிர்தானந்தமயி தேவிகலந்து கொள்கிறார். பின்னர் அங்கு வரும் பக்கதர்களுக்கு ஆசி வழங்குகிறார்.23-ம் தேதி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், காளி பூஜை ஆகியவையும் 24-ம் தேதி காதலை 6.45 மணிக்கு கூஜபூஜை,25-ம் தேதி மாலை 6.45 மணிக்கு மிர்த்திம்ஜய ஹோமம் ஆகியவையும் நடக்கிறது. 24,25 தேதிகளில் காலை 5.30 மணி முதல் 9.30மணி வரையும், மாலை 5மணிக்கும் லலிதா சரஸ்ரநாம அர்ச்சனையும் நடக்கிறது. காலை 10.30 மணி முதல் மாதா அமிர்தானந்தமயி தேவியின் சத்சங்கம், பஜனை, தியானம், தரிசனம் ஆகியவை நடக்கிறது.இதைதொடர்ந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதாவம் வழங்கப்படுகிறது.