சிவாலய ஓட்டம் நடைபெறும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை!
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசக்தி பெற்ற விழாக்களில் சிவாலய ஓட்டம் முக்கியமானதாகும். இவ்வாண்டு சிவாராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் 26-ம் தேதி விளவங்கோடு, கல்குளம் வட்டாரங்களில் அமைந்துள்ள 12 சிவாலயங்களையும் தரிசிக்கும் வண்ணம் விரதமிருந்து சிவால ஓட்டத்தை தொடங்குவார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்தவர்களும் இதில் திரளாக பங்கேற்பார்கள். இந்த நிலையில் சிவாயல ஓட்டம் நடைபெறும் சாலைகளான அருமனை-களியல், திற்பரப்பு-குலசேகரம், முட்டைக்காடு-பத்மநாபபுரம் மற்றும் பொன்மனை செல்லும் ரோடுகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பக்தர்களின் நலன் கருதி சிவால ஓட்டம் நடைபெறும் ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட மார்க்சிஸ்ட செயலாளர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.