உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி வருண ஜப யாக வேள்வி பிரார்த்தனை!

மழை வேண்டி வருண ஜப யாக வேள்வி பிரார்த்தனை!

வடமதுரை: எரியோடு திருஅருட்பேரவையினரும், நாகையகோட்டை கிராம மக்களும் இணைந்து, மழை வேண்டி வருண ஜப யாக வேள்வி பிரார்த்தனை நடத்தினர்.  புதுரோடு அடுத்த ஆத்தூர் பிள்ளையூர் பிரிவிலுள்ள வேல்முருகன் கோயிலில் நடந்த வேள்வி பிரார்த்தனைக்கு ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆத்தூர்பிள்ளையூர் கோயில் டிரஸ்டிகள் கருணாநிதி, பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். கிராம மக்களும் திரளாக பங்கேற்றனர். எரியோடு திருஅருட் பேரவை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மாரிமுத்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !