உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் குண்டம் திருவிழா பணி: போலீஸார் சமரசம்

கோவில் குண்டம் திருவிழா பணி: போலீஸார் சமரசம்

குமாரபாளையம்: குண்டம் திருவிழா பணிகளை, இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என, போலீஸார் சமசரம் செய்து வைத்தனர். குமாரபாளையம் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 18ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. அதற்கான பணியில், குண்டம் பராமரிப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதற்கிடையில், குண்டம் பராமரிப்பு டிரஸ்ட் என்ற அமைப்பினர், "பராமரிப்பு பணிகளை, நாங்கள் தான் மேற்கொள்வோம் எனத் தெரிவித்தனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மார்ச், 5ம் தேதி குண்டம் திருவிழா நடப்பதால், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து, குண்டம் பராமரிப்புக் குழுவினர், குமாரபாளையம் போலீஸில் புகார் செய்தனர். அதில், "தங்கள் குழுவினரை பணி செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பினரையும், இன்ஸ்பெக்டர் சிவராமன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு தரப்பினருமே, குண்டம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவற்றை, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அதனால், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !