கிருஷ்ணகிரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
ADDED :4290 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பம் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், மஹா சிவராத்திரி விழா, வரும், 27ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு, 27ம் தேதி காலை கொடியேற்றுதலும், 28ம் தேதி முகவெட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, வரும் மார்ச், 1ம் தேதி சூலம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 2ம் தேதி விடாய் உற்சவம், 3ம் தேதி அக்னிகுண்டம், தீமிதி விழாவும், 4ம் தேதி அம்மன் திருகல்யாணம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 5ம் தேதி கும்ப பூஜை மற்றும் அன்னதானம், கொடி இறக்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை, அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகிகள் மறறும் பருவதராஜகுல மீனவர் சமுதாய மக்கள் செய்துள்ளனர்.