உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் கல்யாண மஸ்து மீண்டும் தொடங்க தேவஸ்தானம் முடிவு!

திருமலையில் கல்யாண மஸ்து மீண்டும் தொடங்க தேவஸ்தானம் முடிவு!

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், "கல்யாண மஸ்து நிகழ்ச்சியை, மீண்டும், தொடங்க முடிவு செய்துள்ளது. தினமும் கல்யாண உற்சவம் நடைபெறும் திருமலையில், இனி மீண்டும், கல்யாண மஸ்து நிகழ்ச்சியை நடத்த, தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. 2007ல் 5,658 ஜோடிகளுக்கு, தேவஸ்தானம் கல்யாணம் செய்து வைத்தது. அது முதல், ஆறு ஆண்டுகளாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை எவ்வித தடையும் இல்லாமல், தேவஸ்தானம் நடத்தி வந்தது. அந்த வகையில், இதுவரை, 45 ஆயிரத்து 229 பேருக்கு, திருமணம் நடந்துள்ளது. இதை, திருமலையில் நடத்த மிகுந்த சிரமமாக இருந்ததால், கடந்த முறை, 2011ல், ஆந்திராவில் உள்ள, 294 தொகுதிகளில், தேவஸ்தானம் நடத்தியது. ஆனால், அதற்கு சம்பந்தப்பட்ட கணக்குகளை, அவர்கள் தேவஸ்தானத்திற்கு சமர்பிக்காததால், பெரிய பிரச்னை உருவானது. இந்நிலையில், முந்தைய பிரச்னைகளை சரி செய்து, மீண்டும் அந்த நிகழ்ச்சியை தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அபிஜித் லக்னம்: திருமலையில், தினமும் ஏழுமலையானுக்கு, காலை, 11:45 முதல் மதியம், 12:15 வரை, அபிஜித் லக்னத்தில் கல்யாண உற்சவம் நடக்கும். இந்த நேரத்தில், முகூர்த்தங்களை பார்க்காமல், திருமணம் செய்து கொள்ளலாம். மேலும், இவ்வாறு செய்வதால், தம்பதியரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அதனால், திருமலையில் உள்ள, கல்யாண மண்டபங்களில், தினமும், 35 திருமணங்கள் இந்த முகூர்த்தத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை பலர் பெரும் பாக்கியமாக கருதுவர்.

கல்யாண மஸ்து : திருமலையில், 123 புரோகிதர்கள், 68 வாத்தியகாரர்கள் உள்ளனர். சிறிது செலவை குறைத்தால், விருந்துக்கும் வசதிக்கும் எந்த குறையும் இருக்காது. 2011ம் ஆண்டு, மே மாதம் நடைபெற்ற கல்யாண மஸ்து செலவை கணக்கிட்டால், 1 கிராம் எடையில் இரண்டு தாலி, கருப்பு மணி, புது வஸ்திரம், மற்ற மங்கள திரவியங்கள், ஹோம திரவியங்கள், அனைத்தும் சேர்த்து, ஒரு கல்யாணத்திற்கு, 5,000 ரூபாய் ஆனது. புது மண தம்பதிகளுடன், நான்கு பேரை, சுபதம் வழியாக, ஏழுமலையானை தரிசிக்கவும் அனுமதிக்கின்றனர். இவர்களில் ஒவ்வொருவருக்கும் மானிய விலையில், ஒரு லட்டு வழங்கப்படும். கல்யாண மஸ்து குறித்து, தேவஸ்தானம் வெகு விரைவில், அறிவிப்பு வெளியிட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !