காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா!
காரைக்கால்: காரைக்காலில் நடந்த சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடந்தது. காரைக்கால் பாலசந்தர் சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சார்பில் 21ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா நேற்று காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நடந்தது. காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், அதைத்தொடர்ந்து கும்பகோணம் பாகவத சாம்ராட் சீனிவாச பாகவதரின் உஞ்சுவிருத்தி, பின் சீனிவாச பாகவதர் குழுவினரின் பஜனை நடந்தது. 9.30 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி துவங்கியது. காலை 10 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாட்டக்குறிஞ்சி ராமலிங்கம், கலைமாமணி லிங்கம், ரங்கராஜன், இசை ஆசிரியர் சாய்கிருஷ்ணன், சுந்தர், சங்கீத பூஷணம் குமரவேல், தனலட்சுமி, சுபா சங்கர், வித்யா விஸ்நாதன், காயத்திரி சுப்ரமணியன், மீனாட்சி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். பகல் 12 மணிக்கு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் பக்க வாத்திய கலைஞர்கள் வயலின் சிக்கல் பாலு, காரை சுக பாவலன், வெங்கடசுப்ரமணியன், ஜெயகவுரி சாய்கிருஷ்ணன், மிருதங்கம் சிக்கல் வடிவேல், நகை ஸ்ரீராம், நாகபாலசுப்ரமணியன், சரவணன், தபேலா சரவணன், கடம் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் நடராஜன், பாலசங்கீத வித்யாலயா டிரஸ்ட் பொறுப்பாளர்கள் சண்முகநாதன், முத்தரசி, அசோக்குமார் செய்திருந்தனர். மாலை 5.30 மணிக்கு பாலசந்தர் சங்கீத வித்யாலயா மாணவர்களின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடந்தது.