உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திருப்பூர் : திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்து வருகிறது. இன்று (பிப்., 24) கம்பம் போடுதல், சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா கடந்த 18ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்கியது. இன்று காலை, கணபதி பொங்கல் நடக்கிறது. இரவு 8.00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து, கம்பம் எடுத்து வருதல், சக்தி அழைத்தல், 108 பால் குட ஊர்வலம் ஆகியவற்றுடன், வான வேடிக்கை, நையாண்டி மேளம் உள் ளிட்டவை நடக்கிறது. நாளை, 25ம் தேதி படைக்கலம் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பொங்கல் விழா, நாளை மறுநாள் (26ம் தேதி) காலை 5.00 மணிக்கு நடக்கிறது. கிடா வெட்டு, மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. 27ம் தேதி, மஞ்சள் நீராட்டு, 28ம் தேதி, அன்னதானம், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கின்றன. விழாவையொட்டி, அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகளோடு, சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இன்று (24ம் தேதி), சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்திலும், நாளை, ஸ்ரீஆதி பராசக்தி அலங்காரம், 26ம் தேதி, தங்க கவச அலங்காரம், 27ம் தேதி, பண்ணாரி மாரியம்மன் அலங்காரம், 28ம் தேதி, ஸ்ரீமீனாட்சியம்மன் அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவையொட்டி, 27ம் தேதி, இரவு 8.00 மணிக்கு, பாட்டுமன்றம்; 28ம் தேதி இரவு 8.00 மணிக்கு, சாலமன் பாப்பையா பங்குபெறும், பட்டிமன்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !