உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலவிருட்சம் என்ற பெயரில் கோயில்களில் மரம் வைத்து பூஜிப்பது ஏன்?

தலவிருட்சம் என்ற பெயரில் கோயில்களில் மரம் வைத்து பூஜிப்பது ஏன்?

ஒரு சில கோயில்களை மஹா ÷க்ஷத்ரம் என்பர். இவை மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புப் பெற்றிருக்கும். இவற்றில் தலம் என்று குறிப்பிடுவது தல விருட்சத்தைத் தான். இப்படிப்பட்ட கோயில்களில், மூலஸ்தான தெய்வம் சுயம்புவாகவோ (தானாகத் தோன்றியது) தேவர்கள் அல்லது முனிவர்களால் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாகவோ (காலத்தால் பழமை வாய்ந்தது) இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இறைவனை ஆதிகாலத்தில் ஏதாவது ஒரு மரத்தின் கீழேயே வைத்து பூஜித்திருப்பார்கள். இந்த மரம் தான் தல விருட்சம். அக்கோயிலில் உள்ள இறைவனுக்குரிய சக்தியும் பெருமையும் இந்த மரத்துக்கு உண்டு. இதனை வலம் வந்தால், மூலஸ்தான மூர்த்தியை வழிபட்ட பலன் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !