வீரபத்ரசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா
ADDED :4253 days ago
பேரூர்: வேடபட்டியிலுள்ள, வீரபத்ரசுவாமி கோவிலில் மகாசிவாரத்திரி விழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெரியசாமி எழுப்புதலுடன் துவங்கியது. நேற்று, பச்சாபாளையம் சென்று படி விளையாடுதல், இன்று, அஜ்ஜனுார் சென்று படி விளையாடுதல் ஆகியன நடத்தப்பட்டு, நாளை இரவு 7.00 மணிக்கு, சாமிதங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 28ம் தேதி, அதிகாலை 5.00 மணிக்கு, ஜலத்திற்கு செல்லுதல், மதியம் பெரியசாமி அழைப்பு, அபிஷேக பூஜை, பள்ளயம் போடுதல் ஆகியன நடக்கிறது.