உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.17 லட்சம்!

பேரூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.17 லட்சம்!

பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில், 17 லட்சத்து 14 ஆயிரத்து 787 ரூபாய் வசூலாகியிருந்தது. இதில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக 130 கிராம் தங்கமும், 347 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுள்ள கொடிமர உண்டியல், நந்தி உண்டியல், வெள்ள கோபுர உண்டியல், சாமி சன்னதி உண்டியல் உள்பட மொத்தம் 12 உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. மருதமலை சுப்ரமணியசாமி கோவில் துணைஆணையர், செயல்அலுவலர் பழனிகுமார், பேரூர் கோவில் உதவி கமிஷனர் அனிதா, ஆய்வர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில், பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர் காணிக்கையை எண்ணினர். இதில், மொத்த உண்டியலில், ரூ, 15 லட்சத்து 91 ஆயிரத்து 931 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.49 ஆயிரத்து 698 ரூபாயும், அன்னதான உண்டியலில் ரூ. 72 ஆயிரத்து 888 ரூபாயும் வசூலாகியிருந்தது. மேலும், பக்தர்கள் வேண்டுதலுக்காக செலுத்திய 130 கிராம் தங்கமும், 347 கிராம் வெள்ளியும் உண்டியல் எண்ணும் போது இருந்தது. உண்டியல் எண்ணும் பணியின் போது, கோவில் திருப்பணி ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !