அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :4249 days ago
ஊட்டி: பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 48 நாட்கள் மண்டல பூஜை இன்று துவங்குகிறது. பழைய அருவங்காட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. அதிகாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.