உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ரோப்காருக்கு சிக்கல்!

பழநி ரோப்காருக்கு சிக்கல்!

பழநி: பழநி அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலம் 3 நிமிடத்தில் செல்லலாம். நேற்று பழநியில் பலத்த காற்று வீசியதால், பகல் 12:20 மணிக்கு ரோப்கார் நிறுத்தப்பட்டது.காத்திருந்த பக்தர்கள் வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றனர். மீண்டும், மாலை 3:00 மணிக்கு ரோப்கார் இயக்கப்பட்டது. இருப்பினும், காற்று அதிகமாக வீசிய நேரங்களில், அவ்வப்போது ரோப் கார் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (பிப். 26) ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட உள்ளது. மலைக்கோயில் மேல்தளம், கீழ்தளத்தில், பல்சக்கரங்கள், கம்பிவடக்கயிறு, உருளையில், ஆயில், கிரீஸ்கள் இட்டு, குறிப்பிட்ட எடையளவு கற்கள் வைத்து, சோதனை ஓட்டம் நடக்கிறது. நாளை முதல் வழக்கம்போல், காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்படும், என கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.தற்போது, 1 ம் எண் வின்ச் பராமரிப்பு பணிக்காக, நிறுத்தப்பட்டுள்ளதால், நாளை பழநி மலைக்கோயில் சென்று வர, 2 வின்ச்கள் மட்டுமே இயங்கஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !