உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயிலில் கப்பரை திருவிழா!

திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயிலில் கப்பரை திருவிழா!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது. கோயிலில் பிப். 19ல் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. கப்பரையை முன்னிட்டு, சிவபெருமான், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமிகள் உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைத்து, பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜைகள் நடந்தது. நாளை (பிப்.27ல்) சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். தினம் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். மார்ச் 1 அன்று இரவு 12 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூ சப்பரம் கொண்டுவரப்பட்டு, சிவாச்சார்யார்களால் அங்காள பரமேஸ்வரிக்கு பூஜைகள் முடிந்து பூ சப்பரத்தில்  அம்மன் எழுந்தருளி பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 2 அன்று அங்காள பரமேஸ்வரி மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்றடைவார். கோயில் பூசாரிகள் முத்து கார்த்தி, ஆறுமுகம், செல்வராஜ், அசோக்குமார்  பூஜைகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !