உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குப்பம் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்!

ஆலங்குப்பம் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்!

புதுச்சேரி :புதுச்சேரி, ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் நேற்று மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆலங்குப்பத்தில் மயானக்கொள்ளை உற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடி கட்டுதலுடன் துவங்கியது.விழாவையொட்டிநேற்று 26ம் தேதி காலை 10 மணிக்கு பால் மிளகாய் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அரியபுத்திரி, மலையாளத்தான், பாண்டியன் ஆகியோருக்கு பால் மிளகாய் அபிஷேகம் செய்யப்பட்டது.இரவு 7 மணிக்கு பார்வதி பரமசிவன் வேடமணிந்து ஊர் சுற்றுதல் நடந்தது. இன்று 27ம் தேதி இரவு 7 மணிக்கு ரணக்களிப்பு, அங்காளம்மன் மின்விளக்கு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. நாளை 28ம் தேதி மாலை 6 மணிக்கு மயானக்கொள்ளை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !