காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவிலில் இன்று மயான கொள்ளை
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அங்காளம்மன், பூங்காவனத்து அம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா, நாளை, 28ம் தேதி நடக்கிறது. காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில், அங்காளம்மன் கோவில், தாம்சனபேட்டை பூங்காவனத்து அம்மன் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவில், முக்கிய நாளான நாளை, 28ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு முகவெட்டு நிகழ்ச்சியும், 5 மணிக்கு பக்தர்கள் அலகு போடுதலும் நடக்கிறது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று, அலகு குத்தி கொண்டு, வாகனங்கள் இழுத்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம், 1.30 மணிக்கு, எருதுகள் பூட்டிய தேரில் அம்மன் மயான புறப்பாடும், மாலை முதல் இரவு வரை தென்பெண்ணை ஆற்றங்கரையில் மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடக்கிறது.