பக்த ஜனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :4285 days ago
உளுந்தூர்பேட்டை : திருநாவலூர் ஸ்ரீபக்தஜனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரையொட்டி 10 மணி நேர நான்கு கால பூஜைகள் நடக்கிறது. திருநாவலூர் ஸ்ரீபக்த ஜனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரையொட்டி இன்று(27ம் தேதி) மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜைகள் நடக் கிறது. இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை முதற்கால பூஜை, 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை 2ம் கால பூஜை, 1 மணி முதல் 3 மணி வரை 3ம் கால பூஜை, 3 மணி முதல் 6 மணி வரை நான்காம் கால பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.