உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்

நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்

மஞ்சூர் : மஞ்சூர் அருகே நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. மஞ்சூர் அடுத்துள்ள எடக்காடு சுற்றுவட்டார பகுதிகளான நடுஹட்டி, தலைஹட்டி, சூண்டட்டி, முக்கியமலை கிராம மக்கள் சார்பில், கடந்த 1914ம் ஆண்டில் அங்குள்ள பெட்டு குடியில் சிவன் கோவில் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் சிவராத்திரி விழா அன்று பூஜைகள் செய்யப்படுகிறது. நடப்பாண்டு நூற்றாண்டு சிவராத்திரி திருவிழாவையொட்டி, கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !