அம்மன் கோயில் விழா: தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :4284 days ago
தருமபுரி: குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயில் விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை கோயில் அருகே தீ மிதி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.