திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை!
ADDED :4284 days ago
திருவண்ணாமலை: மஹாசிவராத்திரியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, அண்ணாமலையாருக்கு ஒரு லட்சம் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். மாலை, 4 மணி அளவில், ராஜ கோபுரம் எதிரில், 108 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள், அண்ணாமலையாரை போற்றி இசை வழிபாடு நடத்தினர்.