உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் சிவாலயங்களில் மகா சிவராத்திரி

அரியலூர் சிவாலயங்களில் மகா சிவராத்திரி

அரியலூர்: மகா சிவராத்திரி முன்னிட்டு, அரியலூர் ஆலந்துறையார் சிவன் கோவிலில் நேற்று மாலை துவங்கி அதிகாலை வரை, ஸ்வாமி அம்பாள், சுப்ரமணியஸ்வாமி, நவகிரஹங்கள் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் நான்கு கால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அரியலூர் கைலாசநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில், அங்காளபரமேஸ்வரி கோவில்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் லிங்கோத்பவர் அபிஷேகம், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிவாலயங்களில் நடந்தது. பக்தி சிரத்தையுடன் நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறைவழிபாடு செய்தனர். நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமான திருமழபாடி, கீழப்பழுவூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம், உடையார்பாளையம், இலுப்பையூர், சென்னிவனம், வெள்ளூர், பொன்பரப்பி, கோவிந்தபுத்தூர், மேலப்பழுவூர், காமரசவல்லி, வீராக்கண் உள்பட, அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழா நேற்றுகொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !