உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலப்பதிகார விழா புதுகையில் துவக்கம்

சிலப்பதிகார விழா புதுகையில் துவக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இளங்கோவடிகள் இலக்கியமன்றம் சார்பில், சிலப்பதிகார விழா நாளை(1ம் தேதி) ஆரம்பமாகி தொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. நகர்மன்றத்தில் நடைபெறவுள்ள துவக்கவிழாவுக்கு இலக்கியமன்ற தலைவர் வைரமாணிக்கம் தலைமை வகிக்கிறார். கம்பன்கழகத் தலைவர் ராமையா, திருக்குறள் பேரவைத் தலைவர் பழனியப்பன், வர்த்தகக்கழக தலைவர் சின்னப்பா, பேராசிரியர் சத்தியசீலன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். நிறைவு விழாவுக்கு கவிஞர் சிலம்பொலி செல்லப்பனார் தலைமை வகிக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை, பேராசிரியர் ராசகோபாலன், முன்னாள் தக்கார் வைரவன், இளங்கோவடிகள் இலக்கியமன்ற தலைவர் மலையப்பன் உட்பட கவிஞர்கள், நூலாசிரியர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் சிலப்பதிகார நாட்டிய நாடகம், இசையரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !