மார்த்தாண்டேஸ்வரம் கோயிலில் மகாசிவராத்திரி விழா!
ADDED :4280 days ago
மார்த்தாண்டேஸ்வரம்: மகாதேவர் கோயிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு யானை மீது சிவபெருமான் பவனி வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை 6.15 மணிக்கு அகண்டநாமம் ஜெபம் தொடங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி யானை மீது பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.