விருதுநகர் கோயில் கலசத்தை திருடியவர் கைது!
ADDED :4277 days ago
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, கோயில் கலசத்தை திருடியவரை, கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கலசங்களையும் மீட்டனர். நரிக்குடி அருகே வடக்கு மடையில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோயில். இங்கு, தற்போது, மராமத்து பணிகள் நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், கோயில் கோபுரத்தில் இருந்த 6 கலசங்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். கட்டனூர் எஸ்.எஸ்.ஐ., மோகன் தலைமையில், போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில், மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்த கண்ணன், 32, கலசத்தை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கலசங்களையும் பறிமுதல் செய்தனர்.