மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழா நாளை துவக்கம்!
ADDED :4272 days ago
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோவில் திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை தொடங்கி 11ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நாளை காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு தீபாராதனையும், 7 மணிக்கு திருக்கொடி ஏற்று விழாவும் நடக்கிறது.