உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரியின் இன்னொரு பெயர்!

சிவராத்திரியின் இன்னொரு பெயர்!

சிவனுக்குரிய இரவு சிவராத்திரி. இதற்கு சிவநிசி என்றும் பெயர்உண்டு. தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். முதலில் விஷம் எழுந்தது. அதன் வேகத்தை தாங்கமுடியாமல் சிவபெருமானை தஞ்சமடைந்தனர். சிவன், அந்த விஷத்தைக் குடித்து நீலகண்டனாக மாறினார். அந்த இரவு முழுவதும், தேவர்கள் சிவனின் அருட்செயலை வியந்து வழிபட்டனர். அந்த இரவே, சிவராத்திரிவிழாவாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவனின் அடியும் முடியும் தேடிச் சென்ற போது, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் லிங்கோத்பவர் என்னும் வடிவில் காட்சி தந்த நாளேசிவராத்திரி என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !