உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஞ்சிமேடு கோவிலில் திருப்பாவாடை உற்சவம்!

இஞ்சிமேடு கோவிலில் திருப்பாவாடை உற்சவம்!

சேத்துப்பட்டு; இஞ்சிமேடு வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பாவடை அன்னக்கூடை உற்சவம் நடந்தது. காலையில் கோயிலில் சாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு அனுமன் வாகனத் தில் வரதராஜபெருமாள் வீதிஉலா நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !