பண்ணாரி அம்மன் குண்டம் விழா தொடக்கம்!
ADDED :4244 days ago
ஈரோடு: சத்தியமங்கலத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி பண்ணாரி அம்மனுக்கும், சருகு மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பண்ணாரி அம்மனின் பரிவார தெய்வங்கள் மற்றும் காட்டுக்குள் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.