உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

கொடைக்கானல்: கொடைக்கானல் புதுக்காடு பகுதியில் பத்திரகாளியம்மன் கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டது. இந்த பணி முடிவடைந்ததையொட்டி, கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று காலையில் 2ம் கால யாக பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !