உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் தெப்பம்!

திருத்தளிநாதர் கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் தெப்பம்!

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலுக்கு ரூ.25 லட்சம் செலவில் நிலையான மரத்தெப்பம் வடிவமைக்கப்படுகிறது.குன்றக்குடி ஐந்துகோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்தது திருத்தளிநாதர் கோயில். இங்கு,விசாக விழாவில், தெப்பம் நடைபெறும். மண்டகபடிதாரர், கார்காத்த வெள்ளாளர் உறவின்முறை சார்பில், ரூ. 25 லட்சம் செலவில், ஸ்தபதி சாட்சிநாதன் தலைமையில் வடிவமைக்கப்படுகிறது. இவர், கூறுகையில், "இறைவனை பூமியில் தரிசிக்க முடியாத, மீன்களின் பிரார்த்தனையை அடுத்து,நீரில் இறைவன் எழுந்தருளுவதே தெப்பம். இதனால், தெப்பக்குளம்,குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் கோயில்களில் அமைக்கப்பட்டது.இருப்பினும் தற்காலிகமாகவே தெப்பம் கட்டுகின்றனர். தமிழகத்தின் கோயில் களில் தேர் போன்று, அதிகமாக நிரந்தர தெப்பம் இல்லை. தேர்,கோயில் கோபுரம் போன்ற வடிவில் தெப்பமும் அமைக்கப்படும். கோயில் சாஸ்திரப்படி,விநாயகருக்கு சதுரம், முருகருக்கு அறுங்கோணம், ஈஸ்வரன்,அம்பாளுக்கு எண் கோணம், பெருமாளுக்கு 10 அம்சங்களுடன் தெப்பம் செய்யப்படும். அதன்படி, இங்கு எண் கோண வடிவில் தெப்பம் தயாராகிறது. 6 மாதங்களில் தெப்பப் பணிகள் பூர்த்தி அடையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !