உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம்!

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம்!

நாகர்கோவில் : அய்யா வைகுண்டரின் 182-வது அவதார தின விழாவையொட்டி நாகர்கோவிலிலிருந்து சுவாமித்தோப்புக்கு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. அய்யா என்று அழைக்கப்படும் வைகுண்டரின் அவதார தின விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக மாசி 19-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக இரவு நாகர்கோவில் வருகின்றனர். அன்று இரவு மாசி மாநாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை இங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் அணி வகுக்க, மாணவ மாணவியரின் கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கலைவாணர் கலையரங்கத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை , வடக்கு தாமரைகுளம் வழியாக சுவாமித்தோப்பை அடைந்தது. கையில் காவிக்கொடி ஏந்தி, அரஹர சிவசிவ என்று கோஷமிட்டபடி ஆயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !