உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வரும் 12ல் பாலாலயம்!

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வரும் 12ல் பாலாலயம்!

திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், பாலாலய பூஜை வரும், 12ம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற முருகன் கோவிலாக, திருப்போரூர், கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. கடந்த, 2012ம் ஆண்டு, ஜூலை 15ம் தேதி ராஜகோபுரம், பரிகார சுற்று கோவில்கள் மற்றும் துணை கோவில்களின் திருப்பணிகள் துவங்கின. வேம்படி விநாயகர், வினைதீர்க்கும் விநாயகர், முள்ளட்சி அம்மன், வேண்டவராசி அம்மன் என, துணை கோவில்களின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. கந்தசுவாமி கோவிலில், இதுவரை, 70 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மூலஸ்தான மற்றும் உட்பிரகார சன்னிதிகளில் திருப்பணிகள் வரும், 12ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம், காலை 9:00 மணிக்கு பாலாலய பூஜை துவங்குகிறது. இப்பணிகள், மூன்று மாதங்களில், நிறைவு பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !