சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசித் தேரோட்டம்!
ADDED :4342 days ago
திருப்புவனம்: திருப்புவனம், பழையனூரில் உள்ள சுந்தர மகாலிங்கம் சமேத அங்காளஈஸ்வரி கோயிலில் மாசி சிவராத்திரி விழா பிப்.27 தொடங்கியது. மார்ச் 1ல் பாரிவேட்டை நடைபெற்றது. அன்று பக்தர்கள் பால்குடம், சந்தனக்குடம் எடுத்தும் அலகு குத்தியும் பூமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.