ஹயக்ரீவர் கோவிலில் சஹஸ்ரநாம அர்ச்சனை!
புதுச்சேரி: பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ௧௦௦௮ சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவி லில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக ௧௦௦௮ சஹஸ்ரநாம அர்ச்சனை நேற்று முன்தினம் காலை 10:௦௦ மணிக்கு துவங்கியது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர், தங்களுடைய பிள்ளைகள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிக் கொண்டனர். பக்தர்களுக்கு சஹஸ்ரநாம புத்தகம், வெள்ளி டாலர், ரட்சை, எழுத்து பொருட்கள் வழங்கப்பட்டதன. மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ள தேதிகளில் தொடர்ந்து சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம், தேர்வு தேதி ஆகிய வற்றுடன் 750 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 90954–28302 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.