செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா!
ADDED :4265 days ago
செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு அங்காளம்மன் கோவிலில் 1ம் @ததி மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதையொட்டி 28ம் தேதி அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பொன்பத்தி ஏரியில் அண்ணமார் பூஜை நடந்தது. இரவு சக்கராபுரம் குளக்கரையில் இருந்து சக்திகரகம், அக்னி கரகம் எடுத்து வந்தனர். முத்துப்பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடந்தது. இரவு 3 மணிக்கு அம்மன் இருள் முகத்துடன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு குறத்தி அவதாரமும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பகல் 2.30 மணிக்கு அம்மன் மயானத்திற்கு புறப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் அம்மன், காட்டேரி வேடமிட்டு ஆடி வந்தனர். மாலை 4.30 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் மயானக் கொள்ளை நடந்தது.