கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு!
ADDED :4604 days ago
அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று, சாம்பல் புதன் வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன் கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலம் இன்று (புதன்கிழமை) சாம்பல் தினத்துடன் தொடங்குகிறது. கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நாள் முதல் தொடர்ந்து 40 நாள்கள் நோன்பு வாழ்வைக் கடைப்பிடிக்கின்றனர். சாம்பல் புதனை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.