காளியம்மன் கோயில் திருவிழா : குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன்
குமாரபாளையம் : நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பின்னர் பக்தர்கள் காணிக்கையாக விறகுகளைக் கொண்டு கோயிலுக்கு முன் குண்டத்தில் அடுக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் குண்டத்தில் தீ மூட்டப்பட்டு அதிகாலையில் குண்டத்தில் முதலில் பூசாரி இறங்கியதைத் தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற, நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள் என திரளானப் பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர்.
குண்டத்தில் நடக்கும் போது தீக்காயம் ஏற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் சிவராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோயில் முன் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.