உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

காஞ்சீபுரம் ; காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரமோற்சவ விழா நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில்  கொடியேற்றம் நடைபெறுகிறது.  முன்னதாக வேத மந்திரங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, அதிர்வெட்டுகள் ஒலிக்க பிரமோற்சவம் நடக்கிறது. னமும் காலை, இரவு வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலாவும்,  12–ம் தேதி 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 13–ம் தேதி காலை ரத உற்சவம், இரவு மகா அபிஷேகம்,. 20–ம் தேதி 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மாலை பொன் விமானத்தில் திருமுறை உற்சவம் நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !