உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் தேரோட்டம்

அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் தேரோட்டம்


கீழ்பென்னாத்தூர்:  திருவண்ணாமலை மாவட்டம்  அங்காள பரமேஸ் வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்   ஆண்டு தோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு  தேர்திருவிழா கடந்த மாதம் 27–ம் தேதி தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனையும், இரவில் வீதிஉலாவும் நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலையில் அம்மனுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல்வைத்து வழிபட்டனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை   தேர் நிலைக்கு வந்தது. இன்று   பகலில் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் வீதி உலா, இரவில் கும்பமிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !