மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :4271 days ago
மூலனூர்: திருப்பூர், மூலனூரில் வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 32–ம் ஆண்டு திருவிழா கலச பூஜை, வேள்வி அபிசேகம், தீபாராதனைகளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளல், காலை 9 மணிக்கு பூவோடு எடுத்தல் நடந்தது.
தேர் திருவிழாவையொட்டி தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் மாலை கோவிலைச் சேர்ந்ததவர்கள் சார்பில் தேங்காய் உடைக்கப்பட்டது. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.