விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் வசந்த மண்டபம்.. அடிக்கல் நாட்டு விழா!
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நேற்று ரூ.20 லட்சம் செலவில் வசந்த மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவை வேளாக்குறிச்சி ஆதினம் துவக்கி வைத்தார். தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வி யாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ் சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ருத்ரபாதம் காட்டி விளமலில் அருளி யதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனி வர்களுக் கு திருவடிக்காட்டி அருளியதை ஆருத்ரா தரிசனமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ, விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆண் டுதோறும் ஆருத்ரா தரிசன பெருவிழா,மற்றும் சிவன்ராத்திரிவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாதத்திருவாதிரை, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளுக்கு சிறப்புஅபிஷேக ஆராதனையும் தேய் பிறை அஷ்ட்டமியில் காள பைரவருக்கு மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்து வருகிறது. திருமணத்தடை, புத்திபாக்கியம் வேண்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்கின்றனர். இக்கோவிலில் வசந்த மண்டபம் கட்டு வதற்கு துவங்கிய பூமி பூஜையில் கோவில் சிவாச்சாரியர் சத்தியசந்திரசேகர் வரவேற்றார். வேளாக்குறிச்சி ஆதி னம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேட பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் செயல் அலு வலர் ஜெயக்குமார், திருஞான சம்மந்தர் பேரவை அமைப்பை சேர்ந்த வர்கள் மற்றும் அப்பகுதியினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.