உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடி குருபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

ஆலங்குடி குருபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்,  நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குரு பரிகாரஸ் தல மான இங்கு மாசி மகா குருவாரா விழாவை முன்னிட்டு ஆயிரத்து எட்டு சங்காபிஷேக விழா நடந்தது. இதில்  மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக் காரர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட நஞ்சினால் அவ தியுற்றவர்கள்,  இறைவனை வழிபட சிவன் ஆலகால நஞ்சை இத்த லத்தில் குடித்து காத்தமையால் இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் எனப் பெயர் வந்தது. தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் வினாயகருக்கு கலங்காமல் காத்த வினாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து திருணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. ஆதிசங்கரர் இத்தல குரு பகவானை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன், விசுவாமித்திரர், சகபிரம்ம மகரிஷி அகஸ்தியர் முதலானோர் வழி பட்டடுள்ளனர். நாவுக்கரசர் மற்றும் சம்மந்தரால் பாடல் பெற்றது.

இச்சிறப்பு மிக்க இக்கோவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது. இங்கு வியாழன் தோறும்  ஆயிரகணக்கான பக்தர்கள் திருக் கோவிலை சுற்றியுள்ள அமிழ்த புஷ்கரணியில் நீராடி இறைவனை தரிசித்து குருடு, செவிடு நீங்கியும், புத்திரபாக்கியமும் பெற்றுள்ளனர். இக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, கொடிமரம் மற்றும் எட் டுத் திசை பாலகர்களுடன் கூடிய வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தும், வெளிபிரகாரத்தில்  24 நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில்  மாசி மகா குருவாரவிழாவும், 3வது சிறப்பு மகா குரு வாரத்தில் கடந்த வாரம் 27ம்தேதி வியாழன் காலை 6மணியில் இருந்து இரவு 7 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் மார்ச் 3ம்தேதி பல்வேறு ஹோமம் மற்றும் அபிஷேங்க ளைத் தொடர்ந்து இன்று பகல் ஒரு மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஆயி ரக்கணக்கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !