சாரதா ஆசிரமத்தில் ராமகிருஷ்ண ஜெயந்தி
ADDED :4269 days ago
உளுந்தூர்பேட்டை :உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது.உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. இந்நிகழ்ச்சியையொட்டி காலை 4.45 மணிக்கு சுப்ரபாரதம், 5.30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 8.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ரத உற்சவம், 9.30 மணிக்கு ஹோமம், தீபாராதனைகள் நடந்தது.ராமகிருஷ்ண மட தலைவர் ஆனந்தானந்தஜி மகராஜ், சாரதா ஆசிரம தலைவர் யத்தீஸ்வரிராமகிருஷ்ண பிரியா அம்பா சிறப்பு சொற்பொழிவாற்றினர்.