செஞ்சியில் வைணவ மாநாடு
ADDED :4270 days ago
செஞ்சி :செஞ்சி வட்ட ஸ்ரீமதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபை சார்பில் வைணவ மாத மாநாடு நடந்தது.செஞ்சி ஏ.என்.ஏ., மினி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். தசரதன், திருமால் துதி பாடினார். செயலர் ராமச்சந்திர ராமானுஜதாசர் வரவேற்றார்.
வளையசெட்டி குளம் ரகுபதி, பட்டர் வைபவம் தலைப்பிலும், திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேசன், எம்பெருமானார் வைபவம் தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். உபயதாரர் சொக்கலிங்கம் மற்றும் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அண்ணாமலை நன்றி கூறினார்.