ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தெப்ப உற்சவம்
ADDED :4265 days ago
திருச்சி: திருச்சி ரெங்க நாதர் கோயில் தெப்ப உற்சவம் நடந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா கடந்த நான்குநாளுக்கு முன் துவங்கியது. முக்கிய விழாவின் நான்காம் நாளான நேற்று காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபத்திலிருந்து வெள்ளிக்கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். இதில் ஸ்ரீரங்கம் அதன் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.