உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவி லின் பங்குனி பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், பங்குனி பெருவிழா, வரும், 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான நேற்று, கொடியேற்றத்தையொட்டி, அதிகாலை முதலே, பக்தர்கள், கோவிலுக்கு வரத்துவங்கினர். முதலில், பலிபீடம், சூலம் உள்ளிட்டவைக்கு பூஜைகள் நடைபெற்றன. காலை, 9.00 மணிக்கு, பங்குனிப் பெருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, கொடி மரத்திற்கும் கபாலீசுவரருக்கும் தீபாராதனை நடந்தது. பின், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர், சண்டேசர் ஆகிய பஞ்ச மூர்த்திகள், நான்கு மாடவீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 10:00 மணிக்கு, புன்னைமரம், கற்பக மரம், வேங்கை மர வாகனங்களில், பஞ்ச மூர்த்திகள் உலா வந்தனர்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !